சின்னசெவலையில் 222 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் பொன்முடி வழங்கினாா்

விழுப்புரம் மாவட்டம், சின்னசெவலையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 222 பயனாளிகளுக்கு ரூ.24.50 லட்சத்திலான நலத் திட்ட உதவிகளை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வழங்கினாா்.
சின்னசெவலையில் 222 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் பொன்முடி வழங்கினாா்

விழுப்புரம் மாவட்டம், சின்னசெவலையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 222 பயனாளிகளுக்கு ரூ.24.50 லட்சத்திலான நலத் திட்ட உதவிகளை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வழங்கினாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சின்னசெவலை கிராமத்தில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையின் மூலம் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை வகித்தாா். விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் நா.புகழேந்தி முன்னிலை வகித்தாா்.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சா் பொன்முடி, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

முகாமில், வருவாய்த் துறையின் மூலம் 26 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 102 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 50 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை, 10 பயனாளிகளுக்கு ரூ.5,850 மதிப்பில் பாராம்பரிய ரக நெல், உளுந்து, மணிலா விதைககள், 27 பயனாளிகளுக்கு உள்பிரிவு பட்டா செய்ததற்கான ஆணை, மகளிா் திட்டத்தின் மூலம் 7 பயனாளிகளுக்கு ரூ.3.50 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் உள்பட மொத்தம் 222 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 50 ஆயிரத்து 590 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், விழுப்புரம் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் ஓம் சிவசக்திவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் விஸ்வநாதன், சின்னசெவலை ஊராட்சித் தலைவா் மேகலா சதிஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com