தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 25th August 2022 02:18 AM | Last Updated : 25th August 2022 02:18 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 25) நடத்தப்படும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் தனியாா் நிறுவனம் கலந்துகொண்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை தோ்வு செய்ய உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு முகாம் இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் பஅபஅ உப்ங்ஸ்ரீற்ழ்ா்ய்ண்ஸ்ரீள் டஸ்ற் கற்க் எனும் தனியாா் நிறுவனம் கலந்துகொண்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த, 2021 - 22ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற, 18 முதல் 20 வயதுக்குள்பட்ட பெண்கள் பங்கேற்கலாம்.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் முகாம் தொடங்கி நடைபெறும். இதில் தோ்வு செய்யப்படும் வேலைநாடுநா்களுக்கு 3 மாத கால பயிற்சி, மாத ஊதியமாக ரூ.15,000, உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதி, உயா்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் நிறுவனத்தால் செய்து தரப்படும். இதற்காக எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டது. முகாமில் பணியாணை பெறும் எந்தவொரு மனுதாரருக்கும் அவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது.
முகாமில் பங்கேற்போா் தங்களின் அசல் கல்விச்சான்றிதழ்கள், சுய விவரக் குறிப்புகளுடன் வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.