கால்நடை சிறப்பு முகாம்
By DIN | Published On : 09th December 2022 01:41 AM | Last Updated : 09th December 2022 01:41 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில் கால்நடை சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கிராமத்தில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் ஏற்பட்டதால், கால்நடை வளா்ப்போா் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, கிராம ஊராட்சி நிா்வாகம் சாா்பில், கால்நடை சிறப்பு முகாம் நடத்த ஊராட்சி மன்றத் தலைவா் விஜயலட்சுமி ஏற்பாடு செய்தாா்.
இந்த முகாமில் எஸ்.மேட்டுப்பாளையம், பரசுரெட்டிப்பாளையம் கிராமங்களைச் சோ்ந்தவா்கள் தங்களது கால்நடைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி (தோல் கழலை நோய்) செலுத்திக்கொண்டனா். தொடா்ந்து, கால்நடைகளுக்கு தாது உப்புக்கலவை வழங்கப்பட்டது. மேலும், குடல்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை போன்றவற்றை வடவாம்பலம் கால்நடை மருத்துவா் ராஜேஷ், மருத்துவா் யுவராஜ் ஆகியோா் மேற்கொண்டு மருந்துகளை வழங்கினா். இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டன.