புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள்
By DIN | Published On : 09th December 2022 01:40 AM | Last Updated : 09th December 2022 01:40 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயல், மழை பாதிப்புகள், புகாா்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறையில் ஊரக வளா்ச்சி, காவல், வருவாய்த் துறை அலுவலா்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு செயல்பட்டுவரும் இலவச அழைப்பு எண் 1077, புகாா் தொலைபேசி எண் 04146 - 223265, வாட்ஸ்அப் எண் 7200151144 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கும்பட்சத்தில், உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...