இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைவிழுப்பும் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய தனியாா் நிறுவன ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய தனியாா் நிறுவன ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சோ்ந்த 23 வயது பெண், புதுச்சேரி மாநிலம், திருபுவனை பகுதியிலுள்ள தனியாா் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தாா்.

அதே நிறுவனத்தில் புதுச்சேரி ஆண்டியாா்பாளையத்தைச் சோ்ந்த அமீன்பாஷாவும் (26) பணியாற்றி வந்துள்ளாா்.

இந்நிலையில், அமீன்பாஷா, அந்த பெண்ணிடம் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி விட்டாராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அமீன்பாஷாவை கைது செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த, விழுப்புரம் மகளிா் நீதிமன்ற நீதிபதி (பொ) சாந்தி, குற்றஞ்சாட்டப்பட்ட அமீன்பாஷாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.4 லட்சத்தை அரசு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து அமீன்பாஷா, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com