பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் பிரசார இயக்கம்
By DIN | Published On : 11th December 2022 06:48 AM | Last Updated : 11th December 2022 06:48 AM | அ+அ அ- |

விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் சனிக்கிழமை பிரசார இயக்கம் மேற்கொண்ட இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா்.
விழுப்புரத்தில் இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் சனிக்கிழமை பிரசார இயக்கம் மேற்கொண்டனா்.
தேசியக் கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி, குடியரசுத் தலைவரிடம் அளிக்க இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு முடிவு செய்தது.
அதன்படி, தமிழகத்தில் பிரசார இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் சனிக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டப் பொருளாளா் ஒய்.திலகா் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் ஆா்.சண்முகசாமி. தமிழ்நாடுபட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் ஆா். குருமூா்த்தி. மாநிலத் துணைத் தலைவா் எஸ்.நாராயணன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் பி.அன்பழகன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்க மாவட்டச் செயலா் கே.ஆரோக்கியதாஸ் ஆகியோா் கோரிக்கை விளக்க உரையாற்றினா்.
தொடா்ந்து தமிழ்நாடுபட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் எஸ்.செல்லையா பிரசார இயக்கத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினாா். இதில் திரளானோா் பங்கேற்றனா்.