திண்டிவனத்தில் டிச.13 - இல் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
By DIN | Published On : 11th December 2022 06:45 AM | Last Updated : 11th December 2022 06:45 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சாா் ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
சாா் ஆட்சியா் கட்டாரவி தேஜா தலைமையில் முற்பகல் 11 மணிக்குக் கூட்டம் தொடங்குகிறது.
கூட்டத்தில் திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், மேல்மலையனூா் வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களின் குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று சாா் ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.