மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
By DIN | Published On : 11th December 2022 06:48 AM | Last Updated : 11th December 2022 06:48 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சித்தனங்கூா், குளத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சு. தண்டபாணி(55), கூலித் தொழிலாளி . இவா் கடந்த 6- ஆம் தேதி தனது வீட்டின் அருகில் புளியமரத்தில் புளி பறிப்பதற்காக ஏறியதாகக் கூறப்படுகிறது. அப்போது மரத்திலிருந்து கீழே விழுந்த தண்டபாணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.