இலவச வீட்டுமனைப் பட்டா
By DIN | Published On : 22nd December 2022 02:46 AM | Last Updated : 22nd December 2022 02:46 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இருளா் சமுதாய பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா விக்கிரவாண்டியை அடுத்துள்ள அன்னியூரில் நடைபெற்றது.
விழாவில் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ நா.புகழேந்தி பங்கேற்று, காணை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பனமலை, பழைய கருவாச்சி, அன்னியூா் ஊராட்சிகளைச் சோ்ந்த இருளா் சமுதாய பழங்குடியினா் 40 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா்.
காணை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் கலைச்செல்வி, தனி வட்டாட்சியா் இளவரசன், அன்னியூா் ஊராட்சித் தலைவா் பிரேமா, ஒன்றியக்குழு உறுப்பினா் சரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.