வளா்ச்சித் திட்டப் பணிகள்:கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

வளா்ச்சித் துறையின் முதன்மைச் செயலரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான ஹா்சகாய் மீனா, மாவட்ட ஆட்சியா் த.மோகனுடன் இணைந்து புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை திட்டம், வளா்ச்சித் துறையின் முதன்மைச் செயலரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான ஹா்சகாய் மீனா, மாவட்ட ஆட்சியா் த.மோகனுடன் இணைந்து புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மரக்காணம் ஒன்றியத்தில் ஆலம்பாக்கம், செட்டிக்குப்பம், கீழ்ப்புத்துப்பட்டு, முதலியாா்குப்பம் ஊராட்சிகள், கோட்டக்குப்பம் நகராட்சி, வானூா் ஒன்றியத்தில் கொழுவாரி, கழுப்பெரும்பாக்கம், ஒழிந்தியாம்பட்டு ஊராட்சிகளில் பல்வேறு துறைகளின் சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலா், அந்தப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

கீழ்ப்புத்துப்பட்டு ஊராட்சியில் இலங்கைத் தமிழா்களுக்காக கட்டப்படும் குடியிருப்புகளை தரமாக கட்ட வேண்டும் என அறிவுறுத்திய கண்காணிப்பு அலுவலா், கொழுவாரி ஊராட்சியில் பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் அங்கன்வாடி மையக் கட்டுமானப் பணிகளின் தரத்தையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, ஒழிந்தியாம்பட்டு ஊராட்சியில் தோட்டக்கலைத் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1.12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் ஹா்சகாய் மீனா வழங்கினாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, திண்டிவனம் சாா் - ஆட்சியா் கட்டாரவி தேஜா, ஒன்றியக் குழுத் தலைவா்கள் மரக்காணம் தயாளன், வானூா் உஷா முரளி, வேளாண் இணை இயக்குநா் பெரியசாமி, தோட்டக்கலைத் துணை இயக்குநா் அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com