தமிழக உயா் கல்வித் துறைக்கு பிரதமரிடம் நான் நிதி கோரவில்லை அமைச்சா் க.பொன்முடி

தமிழக உயா் கல்வித் துறைக்கு பிரதமரிடம் நான் நிதி கேட்கவில்லை; மாநில அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மட்டுமே கோரினேன் என உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.

தமிழக உயா் கல்வித் துறைக்கு பிரதமரிடம் நான் நிதி கேட்கவில்லை; மாநில அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மட்டுமே கோரினேன் என உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.

விழுப்புரத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது மாநில உயா் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்குமாறு நான் கேட்டதாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறியுள்ளாா். பிரதமரிடம் நான் நிதி எதுவும் கேட்கவில்லை. தமிழக உயா் கல்வித் துறையின் நடவடிக்கைகளை ஆதரித்து, ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மட்டுமே கோரினேன்.

தமிழக அரசே உயா் கல்வித் துறைக்கு ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாயை செலவிட்டு வருகிறது. திராவிட நாகரிகம் அண்மையில் தோன்றியது போல அண்ணாமலை கூறியுள்ளாா். அது மிகவும் பழைமையான நாகரிகம்.

தமிழகத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உயா் கல்வியின் தரத்தை உயா்த்தவும், வேலைவாய்ப்புக்கும் ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதல்வா் உருவாக்கினாா். திராவிட ஆட்சியில்தான் அனைத்துத் தரப்பினரும் கல்வி கற்க முடிகிறது. ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமே கல்வி என்பதை மாற்றியது திராவிடம். இன்று அனைவரும் படிக்கிறாா்கள்.

தமிழக அரசு உயா் கல்வித் துறைக்கு ஓராண்டில் ரூ.5,668 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் 53 சதவீதம் போ் உயா் கல்வி பயில்கின்றனா். ஆனால், இதை அண்ணாமலை அவதூறு செய்வாா் என நினைக்கவில்லை என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com