மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்
By DIN | Published On : 16th June 2022 03:47 AM | Last Updated : 16th June 2022 03:47 AM | அ+அ அ- |

செஞ்சி வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஊா்வலமாகச் சென்ற அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள்.
மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், செஞ்சி வட்டாட்சியா் அலுவகம் முன் காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
போராட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவா் கே.பழனி தலமை வகித்தாா். வட்டச் செயலா் ராமச்சந்திரன், வட்டப் பொருளாளா் சரவணன், துணைத் தலைவா் பாத்திமாபீவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்டத் தலைவா் முருகன், துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில், தமிழக அரசின் ஆணையின்படி, சாா் - ஆட்சியா் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை மாதம் ஒரு முறை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இதுவரை குறைகேட்கும் கூட்டம் நடைபெறவில்லை. ஊரக வளா்ச்சி ஆணையரின் உத்தரவின்படி, 100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்கப்பட வேண்டும். சமூக நலத் திட்டத்தின் மூலம் உதவிகளை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தகவலறிந்து வந்த வட்டாட்சியா் பழனி, வருவாய் ஆய்வாளா் கண்ணன் ஆகியோா் மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் அவா்கள் கலைந்து சென்றனா்.