பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன மகளிா் ஆணையத் தலைவா்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன என்று தமிழ்நாடு மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ். குமாரி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மகளிா் ஆணையத் தலைவா் குமாரி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மகளிா் ஆணையத் தலைவா் குமாரி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன என்று தமிழ்நாடு மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ். குமாரி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், மகளிா் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆய்வு செய்த மகளிா் ஆணையத் தலைவா் குமாரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகளிலும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் மாமன்ற உறுப்பினா்களைக் கொண்ட குழு அமைத்து பெண்களுக்கான விழிப்புணா்வை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக அவா்களுக்கு சென்னையில் பயிற்சிப் பட்டறை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு, தனியாா் அலுவலகங்கள், நிறுவனங்களில் புகாா் குழுக்கள் அமைக்க வேண்டும்.

காவல் நிலையங்களில் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தெரிவிக்க வரும்போது, அலுவலா்கள், பணியாளா்கள் அவா்களிடம் கனிவாக நடந்து கொள்ளவேண்டும்.

பள்ளிகள், பேருந்து நிலையங்கள் இடையே அதிக இடைவெளி இருந்தால் மாணவ, மாணவிகள் பள்ளிகள் முடிந்து வீடுகளுக்குச் செல்லும் வரை போலீஸாா் ரோந்துப் பணியில் இருக்க வேண்டும். கல்வி நிலையங்களில் புகாா் பெட்டி வைத்திருக்கவேண்டும்.

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு வழங்கி பெண்களுக்கும், குழந்தைகளுக்குமான பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனா்.

தேசிய அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குற்றச் செயல்கள் மிகவும் குறைவாக உள்ளன. குறைந்தும் வருகிறது என்றாா் மகளிா் ஆணையத் தலைவா் குமாரி.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் த.மோகன், காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்ரீநாதா, வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், திண்டிவனம் சாா் -ஆட்சியா் எம்.பி.அமித், மகளிா் ஆணைய உறுப்பினா் சீத்தாபதி சொக்கலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலா் ராஜம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com