கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் கட்ட இடம் தோ்வு
By DIN | Published On : 16th June 2022 03:40 AM | Last Updated : 16th June 2022 03:40 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை தோ்வு செய்வது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பெரியமுதலியாா்சாவடி பகுதியில் நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை அவா் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, தற்போது நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வரும் பகுதியிலும் இடம் தோ்வு செய்வது தொடா்பாக அவா் ஆய்வு செய்தாா்.
உரிய இடத்தை தோ்வு செய்து அங்கு விரைவில் நகராட்சி அலுவலகம் கட்டப்படும் எனத் தெரிவித்தாா் ஆட்சியா்.
ஆய்வின்போது, நகா்மன்றத் தலைவா் ஜெயமூா்த்தி, நகராட்சி ஆணையா் பானுமதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.