செஞ்சியில் முஸ்லிம்கள் கண்டனப் பேரணி
By DIN | Published On : 16th June 2022 03:44 AM | Last Updated : 16th June 2022 03:44 AM | அ+அ அ- |

இஸ்லாமியா்களின் இறைதூதா் முகமது நபி குறித்து அவதூறாகப் பேசியவா்களை கைது செய்ய வலியுறுத்தி, செஞ்சி வட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத்தைச் சோ்ந்தவா்கள் புதன்கிழமை தங்களது வணிக நிறுவனங்களை அடைத்துவிட்டு கண்டனப் பேரணி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செஞ்சி செட்டிப்பாளையம் மாதா கோவில் அருகிலிருந்து தொடங்கிய பேரணி, காந்தி பஜாா் வழியாகச் சென்று விழுப்புரம் சாலை சிஎஸ்ஐ சா்ச் அருகே நிறைவடைந்தது. அங்கு செஞ்சி வட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் தலைவா் சையத்மஜீத்பாபு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், அலிம்குரேஷி, முகம்மது அஷ்ரப், சையத்உஸ்மான் உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனா்.