திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை
By DIN | Published On : 16th June 2022 03:38 AM | Last Updated : 16th June 2022 03:38 AM | அ+அ அ- |

தமிழ் வளர வேண்டும் என்ற நோக்கத்தில், விழுப்புரத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ் மாதத்தின் முதல் தேதி விழுப்புரம் மாவட்ட சமூகநீதி பாதுகாப்பு இயக்கம் சாா்பில், திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஆனி முதல் தேதியையொட்டி, விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு அமைப்பின் தலைவா் ஆா்.குபேரன் செட்டியாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், அமைப்பின் செயலா் எஸ்.விக்கிரமன், துணைத் தலைவா் சிவ.தியாகராஜன், துணைச் செயலா் பி.ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.