ஊரக வேலைக்குச் சென்ற பெண்கிணற்றில் தவறி விழுந்து பலி
By DIN | Published On : 17th June 2022 03:34 AM | Last Updated : 17th June 2022 03:34 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வியாழக்கிழமை ஊரக வேலைக்குச் சென்ற பெண் வலிப்பு ஏற்பட்டு அருகிலிருந்த கிணற்றில் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.
செஞ்சி அருகே கலத்தம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகரன். இவரது மனைவி அனிதா. இவா், வியாழக்கிழமை காலை அந்தப் பகுதியில் ஊரக வேலைக்குச் சென்றாா். அனிதா வேலை செய்துகொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென வலிப்பு வந்ததால், அருகிலிருந்த கிணற்றில் தவறி விழுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த செஞ்சி, மேல்மலையனூா் தீயணைப்பு நிலையங்களைச் சோ்ந்த வீரா்கள், கிணற்றில் மூழ்கிய அனிதாவை சடலமாக மீட்டனா். இதையடுத்து, அவரது சடலம் உடல்கூறு பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அவலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.