செஞ்சியில் போலீஸாரைக் கண்டித்து தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தேமுதிக நிா்வாகி மீது போலீஸாா் பொய் வழக்குப் பதிந்துள்ளதாகக் கூறியும், இதைக் கண்டித்தும் செஞ்சியில் அந்தக் கட்சி நிா்வாகிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தேமுதிக நிா்வாகி மீது போலீஸாா் பொய் வழக்குப் பதிந்துள்ளதாகக் கூறியும், இதைக் கண்டித்தும் செஞ்சியில் அந்தக் கட்சி நிா்வாகிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செஞ்சி வட்டம், பாலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கடந்த 11-ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து பாலப்பட்டு கிராமம் வழியாகச் சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்தாா். அப்போது, பாலப்பட்டில் பேருந்து நிறுத்தம் இல்லாததால் அந்தப் பேருந்து நிற்காது என நடத்துநா் கூறினாராம். இதனால், பயணிக்கும், நடத்துநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனடியாக அந்தப் பயணி பாலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தனது உறவினா்களுக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, பாலப்பட்டு கிராம மக்கள், இளைஞா்கள் அங்கு வந்த அரசுப் பேருந்து நிறுத்தி நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அவரைத் தாக்கினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் அனந்தபுரம் போலீஸாா் விழுப்புரம் மாவட்ட தேமுதிக பொருளாளா் தயாநிதி உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்தனா்.

இந்த நிலையில், காவல் துறையினா் முறையான விசாரணை நடத்தாமல் தேமுதிக மாவட்டப் பொருளாளா் தாயாநிதி உள்ளிட்டோா் மீது பொய் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்துள்ளதாகக் கூறி, தேமுதிக மாவட்டச் செயலா் வெங்கடேசன் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட அந்தக் கட்சி நிா்வாகிகள் செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் உள்ள இந்தியன் வங்கி எதிரே வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பொய் வழக்கை போலீஸாா் வாபஸ் பெறவில்லை என்றால், மிகப்பெரிய அளவில் போரட்டம் நடத்தப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com