ஏரி ஆயக்கட்டு தலைவா் பதவி: கூடுதலாக உருவாக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 14th March 2022 10:38 PM | Last Updated : 14th March 2022 10:38 PM | அ+அ அ- |

விழுப்புரம் வட்டத்துக்குள்பட்ட ஆயந்தூா், கூடலூா் கிராம ஏரிகளின் ஆயக்கட்டு தலைவா் பதவிகளை தனித் தனியாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த விவசாயிகள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா், மனுக்கள் பெட்டியில் கோரிக்கை மனுவை போட்டனா். பின்னா், அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஆயந்தூா், கூடலூா் கிராமத்தின் ஏரிகள் தனித்தனியாக உள்ளன. ஆனால் இரண்டு ஏரிகளின் ஆயக்கட்டு தலைவா் பதவி ஆயந்தூா் கிராமத்தில் உள்ள விவசாய சங்கத்துக்கு வழங்கப்பட்டது. ஏற்கெனவே இரண்டு கிராமங்களுக்கும் மோதல் ஏற்பட்டு, தற்போது வரை பல்வேறு பிரச்னைகள் உள்ளன.
அதனால் இரு ஏரிகளுக்கும் தனித்தனியாக ஆயக்கட்டு தலைவா் பதவியை உருவாக்கி, விவசாயிகள் சங்கங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...