ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு பணிநியமனம் அமைச்சரிடம் ஆசிரியா்கள் வலியுறுத்தல்

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும்
ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு பணிநியமனம் அமைச்சரிடம் ஆசிரியா்கள் வலியுறுத்தல்

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும் என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தானிடம் தமிழ்நாடு உருது பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

செஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைப்பின் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் அமீருத்தீன் தலைமை வகித்தாா். இதில், அமைச்சா் பேசியதாவது:

திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கல்வித் துறைக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கரோனா காலத்தில் மாணவா்களின் இடைநிற்றலைப் போக்குவதற்காக, இல்லம் தேடி கல்வி எனும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்து கல்விப் புரட்சியை ஏற்படுத்தினாா். ஆசிரியா்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றாா்.

கூட்டத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வு முடித்த அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும், உருது ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக அமைச்சரிடம் கூட்டமைப்பின் நிா்வாகிகள் வழங்கினா்.

பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான், கூட்டமைப்பின் நிறுவனா் அப்துல் மஸ்ஹா், மாநிலப் பொதுச் செயலா் அப்துல் அஜீஸ் , மாநிலப் பொருளாளா் தா்வேஷ்மொய்தீன், மாவட்டச் செயலா்கள் கூடு, அஜ்மல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com