தொகுப்பூதிய காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வலியுறுத்தல்

தொகுப்பூதிய காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் வலியுறுத்தினா்.

தொகுப்பூதிய காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் வலியுறுத்தினா்.

இந்தக் கூட்டமைப்பின் விழுப்புரம் மாவட்ட செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் குருமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் நாராயணன், முன்னாள் மாவட்டத் தலைவா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுக்குழு உறுப்பினா் அன்பழகன் வரவேற்றாா். மாநிலத் தலைவா் செல்லையா சிறப்புரையாற்றினாா். மாவட்ட பொருளாளா் திருமலைச்செல்வன் நன்றி கூறினாா்.

கூட்டத்தில், தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா், முதுகலை பட்டதாரி ஆசிரியா்களாக பதவி உயா்வு வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தொகுப்பூதிய காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com