மண்வள அட்டை விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 02nd May 2022 11:05 PM | Last Updated : 02nd May 2022 11:05 PM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியம், தொண்டூா், பூதேரி கிராமங்களில் மண் வள அட்டை, பாசனநீா் பரிசோதனை விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வல்லம் வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் சுரேஷ் தலைமை வகித்தாா். தொண்டூா் ஊராட்சி மன்றத் தலைவா் சின்னையா வரவேற்றாா்.
ஊராட்சி செயலா் துரைமுருகன் முன்னிலை வகித்தாா். விவசாயக் கடன் அட்டை பெறுவது, அதன் நன்மைகள், கிசான் கடன் அட்டை பெறுவதற்கான விதிமுறைகளை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
நடமாடும் பரிசோதனை நிலையத்தின் மூலம் மண் மாதிரி சேகரித்தல், பரிசோதனை செய்தல், இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளின் வயல்களில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
பாசன நீரின் களா் அமிலத் தன்மை, உப்பின் அளவு வகைப்பாடு கண்டறியப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
வல்லம் வட்டார துணை இயக்குநா் கோவிந்தராஜ், உதவி வேளாண்மை அலுவலா் மஞ்சு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.