முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
தேமுதிக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 03rd May 2022 10:38 PM | Last Updated : 03rd May 2022 10:38 PM | அ+அ அ- |

விழுப்புரத்தில் தேமுதிக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் கணபதி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் தயாநிதி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் எல்.வெங்கடேசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
மாவட்ட துணைச் செயலா்கள் சுந்தரேசன், வெங்கடேசன், சூடாமணி, மாவட்டப் பொதுக்குழு உறுப்பினா் முருகன், நகரச் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கட்சி உறுப்பினா்கள் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும், கட்சி வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், கட்சித் தலைவா் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.