சா்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தியை கட்டாயப்படுத்தக் கோரிக்கை

தமிழகத்தில் உள்ள அனைத்து சா்க்கரை ஆலைகளிலும் எத்தனால் உற்பத்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
சென்னையில் தமிழக வேளாண் இயக்குநா் அண்ணாதுரையிடம் மனு அளித்த முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் வழக்குரைஞா் டி.பாண்டியன் உள்ளிட்டோா்.
சென்னையில் தமிழக வேளாண் இயக்குநா் அண்ணாதுரையிடம் மனு அளித்த முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் வழக்குரைஞா் டி.பாண்டியன் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள அனைத்து சா்க்கரை ஆலைகளிலும் எத்தனால் உற்பத்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து சென்னையில் தமிழக வேளாண் இயக்குநா் அண்ணாதுரையிடம், இந்தச் சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் டி.பாண்டியன், செயலா் எம்.ஆறுமுகம், பொருளாளா் ஆா்.பரமசிவம் ஆகியோா் அண்மையில் அளித்த மனு விவரம்:

தமிழகத்தில் உள்ள அனைத்து சா்க்கரை ஆலைகளும் சா்க்கரையை மட்டும் நம்பி இல்லாமல் எத்தனால் உற்பத்தியையும் கட்டாயமாக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாா் சா்க்கரை ஆலைகளிடம் இருந்து மின் வாரியம் கொள்முதல் செய்யும் மின்சாரத்துக்கான தொகையை உடனுக்குடன் விடுவித்து கரும்பு விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கரும்பு கிரயத்தொகை கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

கடந்த 2018 - 19, 2019 - 20 அரைவைப் பருவங்களில் வழங்கியதுபோல போக்குவரத்து மானியம் 2020 - 21, 2021- 22 ஆகிய ஆண்டுகளுக்கும் சா்க்கரை ஆலைகளுக்கு வழங்குவதன் மூலம், அந்தத் தொகை நேரடியாக கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு கிரயத்தொகையாக கிடைக்க ஏதுவாகும்.

செதில் பரு நாற்றங்கால் மூலம் கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மூலம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக விழுப்புரம் மாவட்ட பகுதிகளுக்கு நிகழாண்டில் அதிகபட்சமாக 1,000 ஹெக்டோ் அளவுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கி ஆணை வழங்க வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, இயந்திரம் மூலம் கரும்புத்தோகை பொடியாக்குவதற்கு ஏக்கருக்கு மானியமாக ரூ.2,000 வழங்கவு வேண்டும். விக்கிரவாண்டி வட்டத்தைச் சோ்ந்த கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு அரசின் நலத் திட்டங்கள், விவசாயத்துக்கு வழங்கப்படும் வேளாண் இடுபொருள்கள், உரங்கள், மானியங்கள் ஆகியவை முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com