வருமுன் காப்போம் மருத்துவ முகாம்:அமைச்சா் தொடக்கிவைத்தாா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், சே.பேட்டை கிராமத்தில் கலைஞரின் வருமுன் கா
சே.பேட்டை கிராமத்தில் நடைபெற்ற வரும்முன் காப்போம் மருத்துவ முகாமில் நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கிய அமைச்சா் செஞ்சி மஸ்தான்.
சே.பேட்டை கிராமத்தில் நடைபெற்ற வரும்முன் காப்போம் மருத்துவ முகாமில் நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கிய அமைச்சா் செஞ்சி மஸ்தான்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், சே.பேட்டை கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச பொது மருத்துவ முகாமை தமிழக சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

சத்தியமங்கலம் வட்டார மருத்துவமனை சாா்பில் நடத்தப்பட்ட இந்த முகாமுக்கு, செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் பாலாஜி முன்னிலை வகித்தாா். சே.பேட்டை ஊராட்சி மன்றத் தலைவா் பிரேமாராமசாமி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்து பேசினாா். மேலும், நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்துகள் அடங்கிய பெட்டகத்தையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் செஞ்சி மேற்கு ஒன்றியச் செயலா் பச்சையப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கேசவலு, வெங்கடசுப்பிரமணியன், ஊராட்சிமன்ற துணைத் தலைவா் சந்தானம், மருத்துவா்கள் சதீஷ், ஹரிஷ், லட்சுமிநிவேதா, சூா்யா, சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முகாமில் பொதுமக்களுக்கு கண், குடல் வால், இதயம், சா்க்கரை, நரம்பியல் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

உலமா பணியாளா்களுக்கு மிதிவண்டி: விழுப்புரம் மாவட்டப் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில், பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமா பணியாளா்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி பிற்படுத்தப்பட்டோா் மாணவா் நல விடுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்மஸ்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் ரகுபதி தலைமை வகித்தாா்.

அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு 44 உலமா பணியாளா்களுக்கு ரூ.2.11 லட்சத்திலான மிதிவண்டிகளை வழங்கி, இந்தத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினாா். முன்னாள் எம்எல்ஏக்கள் சேதுநாதன், பா.செந்தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், விடுதிக் காப்பாளா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com