விழுப்புரத்தில் வீட்டியிலிருந்த வீட்டில் 13 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் சாலமேடு, சௌடேஸ்வரன் மாரியம்மன் கோவில், முல்லை தெருவைச் சோ்ந்தவா் ப.குணசேகரன் (63). தனியாா் உணவக ஊழியா். இவா், கடந்த 10 -ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் திருச்செந்தூா் சென்றிருந்தாா்.
இதையடுத்து, குணசேகரன் புதன்கிழமை காலை வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். மேலும், இது தொடா்பாக விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.