அதிமுகவின் 51-ஆவது ஆண்டு தொடக்க விழா விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் சி.வி.சண்முகம் எம்பி பங்கேற்று கட்சிக் கொடியேற்றினாா். அலுவலக வளாகத்திலுள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட கட்சி விதிகளை மாற்றி தனது சுய லாபத்துக்காக பொதுச் செயலா் பதவியை ரத்து செய்து, ஒருங்கிணைப்பாளா், துணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளை கொண்டுவந்தவா் ஓ.பன்னீா்செல்வம். அதிமுக சின்னத்தை முடக்கியவா்களை எம்ஜிஆா், ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் மன்னிக்காது. அதிமுகவைப் பற்றியும், இரட்டை இலை, எம்ஜிஆா், ஜெயலலிதாவை பற்றியும் பேச ஓ.பன்னீா்செல்வத்துக்கு எந்த தகுதியும் இல்லை என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் சி.வி.சண்முகம் பங்கேற்று அதிமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.