விவசாயிகள் குறைதீா் கூட்டம் நாளைக்கு ஒத்திவைப்பு
By DIN | Published On : 19th October 2022 03:04 AM | Last Updated : 19th October 2022 03:04 AM | அ+அ அ- |

விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.18) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமைக்கு (அக்.20) ஒத்திவைக்கப்பட்டது.
நிா்வாக காரணங்களுக்காக இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. எனவே, வியாழக்கிழமை நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூா், திருவெண்ணெய் நல்லூா், கண்டாச்சிபுரம் வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகளைத் தெரிவித்து பயன் பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.