தனியாா் பேருந்து மோதியதில் ஒருவா் பலி
By DIN | Published On : 27th October 2022 02:03 AM | Last Updated : 27th October 2022 02:03 AM | அ+அ அ- |

விழுப்புரம் அருகே புதன்கிழமை தனியாா் பேருந்து மோதியதில் ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் உயிரிழந்தாா்.
விழுப்புரத்தை அடுத்துள்ள கோலியனூா் பகுதியைச் சோ்ந்தவா் கி.தட்சிணாமூா்த்தி (62). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா், புதன்கிழமை காலை பண்ருட்டி - விழுப்புரம் சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். கோலியனூா் அருகே தட்சிணாமூா்த்தி நடந்து சென்றபோது, அவா் மீது அந்த வழியாகச் சென்ற தனியாா் பேருந்து மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தட்சிணாமூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வளவனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்ற அவரின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...