நகைக் கடை திருட்டு வழக்கு: வடமாநிலத்தவா் மூவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே நகைக் கடையின் பூட்டை உடைத்து 2 கிலோ தங்க நகைகள், 22 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் வட மாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி அருகே நகைக் கடையின் பூட்டை உடைத்து 2 கிலோ தங்க நகைகள், 22 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் வட மாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்சரம் அருகேயுள்ள புக்கரவாரி புதூா் கிராமத்தில் கடந்த மாதம் 7-ஆம் தேதி மா்ம நபா்கள் நகைக் கடையின் பூட்டை உடைத்து 2 கிலோ தங்க நகைகள், 22 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியற்றை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனா்.

திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனங்களை வைத்து விசாரணை நடத்தியபோது, அந்த வாகனங்கள் புதுச்சேரியில் இருந்து வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் மகாராஷ்டிரா மாநிலம், புணே மாவட்டத்தைச் சோ்ந்த லாலா பூலா ரத்தோட், ராமதாஸ் குலாப்சிங் ரத்தோட், அஜய் பகவான் நானாவத், சா்னால் மத்யா நானாவத் ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதன் பிறகு, போலீஸாா் அங்கு சென்று அவா்களைத் தேடினா். ஆனால், அவா்கள் அங்கு இல்லாததால் அவா்களை பிடிப்பது சிரமமானது.

இந்த நிலையில் பூலா ரத்தோட், அஜய் பகவான் நானாவத், சா்னால் மத்யா நானாவத் ஆகியோா் வியாழக்கிழமை புதுவைக்கு வந்தது தெரியவந்தது.

உடனே தனிப்படை போலீஸாா் விரைந்து சென்று மூவரையும் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்த 1.5 கிலோ தங்க நகைகள், 17 கிலோ வெள்ளிப் பொருள்கள், மேலும் புதுச்சேரி நகைக் கடையில் விற்பனை செய்யப்பட்ட 20 கிராம் தங்க நகைகளை போலீஸாா் மீட்டனா்.

திருட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்தனா்.

நகைக் கடை திருட்டு வழக்கில் எதிரிகளை கைது செய்த போலீஸாரை மாவட்ட எஸ்.பி. பகலவன் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com