விழுப்புரம்: 11 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்
By DIN | Published On : 08th September 2022 02:33 AM | Last Updated : 08th September 2022 02:33 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் 11 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
அதன்படி, சமூகப் பாதுகாப்புத் திட்ட வானூா் தனி வட்டாட்சியா் பிரபு வெங்கடேஸ்வரன், பெலாக்குப்பம் (நில எடுப்பு) அலகு - 3 சிப்காட் வட்டாட்சியராகவும், கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் காா்த்திகேயன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வானூா் தனி வட்டாட்சியராகவும், சமூகப் பாதுகாப்புத் திட்ட செஞ்சி தனி வட்டாட்சியா் அலெக்ஸாண்டா், மேல்மலையனூா் வட்டாட்சியராகவும், சமூகப் பாதுகாப்புத் திட்ட கண்டாச்சிபுரம் தனி வட்டாட்சியா் ஆதிசக்தி சிவகுமரி மன்னன், கண்டாச்சிபுரம் வட்டாட்சியராகவும், மரக்காணம் நில எடுப்பு தனி வட்டாட்சியா் ரங்கநாதன், சமூகப் பாதுகாப்புத் திட்ட செஞ்சி தனி வட்டாட்சியராகவும், சிப்காட் நில எடுப்பு தனி வட்டாட்சியா் தங்கமணி, சமூகப் பாதுகாப்புத் திட்ட திண்டிவனம் தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதேபோல, மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரின் நோ்முக உதவியாளா் சீனிவாசன், மாவட்ட ஆட்சியா் அலுவலக பொது மேலாளராகவும், சமூகப் பாதுகாப்புத் திட்ட திண்டிவனம் தனி வட்டாட்சியா் கற்பகம், சமூகப் பாதுகாப்புத் திட்ட கண்டாச்சிபுரம் தனி வட்டாட்சியராகவும், விடுப்பிலிருந்த விழுப்புரம் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் வெங்கடசுப்பிரமணியன் விழுப்புரம் மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரின் நேரிமுக உதவியாளராகவும், விழுப்புரம் அலுவலக பொது மேலாளா் சுந்தரராஜன், மரக்காணம் நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், மேல்மலையனூா் வட்டாட்சியா் கோவா்தணன், வானூா் வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்து ஆட்சியா் மோகன் உத்தரவிட்டாா்.