மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 09th September 2022 10:57 PM | Last Updated : 09th September 2022 10:57 PM | அ+அ அ- |

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மதுரை வீரன் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்தக் கோயிலின் உள்பிரகாரத்தில் ஸ்ரீவிநாயகா், ஸ்ரீமுருகன், ஸ்ரீமகுடிசித்தா், ஸ்ரீபொம்மியம்மாள், ஸ்ரீவெள்ளையம்மாள் பரிவார தெய்வங்கள் அமைந்துள்ளன. இந்த கோயிலில் கடந்த 7-ஆம் தேதி கோ பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து, ஸ்ரீமதுரை வீரனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு ஸ்ரீமதுரை வீரன், பொம்மியம்மாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு நன்னீராட்டு செய்யப்பட்டது. தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் வாசுதேவன், தனசேகரன் மற்றும் திருப்பணிக் குழுவினா்கள் செய்திருந்தனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.