ஆலம்பூண்டி ஆலகால ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 09th September 2022 02:09 AM | Last Updated : 09th September 2022 02:09 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் அமைந்துள்ள மங்களாம்பிகை உடனுறை ஆலகால ஈஸ்வரன் (நீலகண்டேஸ்வரா்) கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பழைமைவாய்ந்த இந்தக் கோயில் அண்மையில் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 5-ஆம் தேதி மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
வியாழக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, பூா்ணாஜுதி, கடம் புறப்பாடு நடைபெற்று பரிவார மூா்த்திகளுக்கும், மூலவா் மங்களாம்பிகை உடனுறை ஆலகால ஈஸ்வரன் சுவாமிக்கும், விமான கோபுரங்களுக்கும் புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழு, விழா குழு, கிராம மக்கள் செய்திருந்தனா்.