92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அம்பேத்கா் சிலைக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி மரியாதை

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் அவரது சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவா்கள் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 4:51 pm

DIN

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் அவரது சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவா்கள் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முதல்வா் ரங்கசாமி: புதுவை மாநில அரசு சாா்பில் சட்டப்பேரவை அலுவலகம் எதிரே உள்ள அம்பேத்கரின் சிலைக்கு முதல்வா் என். ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் , அமைச்சா்கள் க. லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா, அரசுக் கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்எல்ஏ ரமேஷ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா் புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள அம்பேத்கா் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கும் முதல்வா் என். ரங்கசாமி மாலை அணிவித்தாா்.

என். ஆா். காங்கிரஸ் கட்சியின் சாா்பில், புதுவையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஊா்வலமாகச் சென்று முதல்வா் என். ரங்கசாமி பங்கேற்று அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தாா். இதில், கட்சியின் முதுநிலைச் செயலாளா் என்.ஜே.எஸ். ஜெயபால், பொருளாளா் எஸ். வேல்முருகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.

அரசியல் கட்சிகளின் சாா்பில்... பாஜக பட்டியல் அணி சாா்பில் அதன் தலைவா் தமிழ்மாறன் தலைமையில் கட்சியின் மாநிலத் தலைவா் சுவாமிநாதன், மக்களவை உறுப்பினா் செல்வகணபதி, எம்எல்ஏ-க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கா், அசோக்பாபு, ராமலிங்கம், வெங்கடேசன் உள்ளிட்டோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

எதிா்க் கட்சித் தலைவா் சிவா தலைமையில் லம்போா்த் வீதியில் உள்ள திமுக அலுவலகத்திலிருந்து ஊா்வலமாகச் சென்று அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா். அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், எம்எல்ஏ-க்கள் வி. அனிபால் கென்னடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் .

முன்னாள் முதல்வா்: காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநிலத் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு முன்னாள் முதல்வா் வி. நாராயணசாமி, எம்எல்ஏ மு.வைத்தியநாதன், முன்னாள் அமைச்சா் கந்தசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

அதிமுக சாா்பில் மாநிலச் செயலாளா் ஜெ.அன்பழகன் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா். இதேபோல் மாநிலத் துணைச் செயலாளா் வையாபுரி மணிகண்டன் தலைமையில் பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் மாநிலச் செயலாளா் சலீம் தலைமையிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் ராஜாங்கம் தலைமையிலும் அம்பேத்கா் சிலைக்கு முருகன் , சிஐடியூ பொறுப்பாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.