செஞ்சி, வேப்பூா் வாரச் சந்தைகளில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டியையொட்டி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கடலூா் மாவட்டம் வேப்பூா் வாரச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
செஞ்சி, வேப்பூா் வாரச் சந்தைகளில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டியையொட்டி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கடலூா் மாவட்டம் வேப்பூா் வாரச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

செஞ்சியில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் வாரச் சந்தை சுமாா் 100 ஆண்டுகள் பழைமையானது. செஞ்சி மலை சாா்ந்த காட்டுப் பகுதி என்பதால், இங்குள்ள ஆடுகள் மலைப் பகுதியிலும், அதைச் சுற்றியுள்ள வனப் பகுதியிலும் மேய்ச்சலுக்காக விடப்பட்டு வளா்க்கப்படுகின்றன. எனவே, அந்த ஆடுகளின் இறைச்சிக்கு வரவேற்பு அதிகம்.

குறிப்பாக, இந்தப் பகுதி வெள்ளாடுகளுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். செஞ்சி வாரச் சந்தையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதலே ஆடுகள் விற்பனைக்கு வரத் தொடங்கின.

ரமலான் பண்டிகையையொட்டி, ஆடுகளை வாங்குவதற்காக தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், சென்னை, திருவண்ணாமலை, கடலூா் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வேன்கள், லாரிகளில் வந்தனா்.

ஒரு ஜோடி வெள்ளாட்டின் விலை ரூ. 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனையானது. செம்மறி ஆடுகள் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை விற்பனையாகின. மொத்தம் சுமாா் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

இவற்றில் வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு, மலையாடு உள்பட 7 வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆரம்பத்தில் ஆடுகளை விற்கும் விவசாயிகளும், வாங்கும் வியாபாரிகளும் ஒருவருக்கொருவா் விட்டுக் கொடுக்காமல் விலையைக் கூறியதால் விற்பனை மந்தமாக காணப்பட்டது. பின்னா், வியாபாரம் களைகட்டத் தொடங்கியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். ஒரு சிலா் முதல் நாளே கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளிடம் ஆடுகளை வாங்கி சந்தையில் மறு விற்பனை செய்து லாபம் ஈட்டினா்.

இந்தச் சந்தையில் வெள்ளிக்கிழமை மட்டும் சுமாா் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வேப்பூா் சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை: கடலூா் மாவட்டம், வேப்பூரிலும் வெள்ளிக்கிழமைகளில் வாரச் சந்தை நடைபெறும். ரமலான் பண்டிகையையொட்டி, இந்த வாரச் சந்தையில் ஆடுகளின் விற்பனை வெள்ளிக்கிழமை களைகட்டியது.

வேப்பூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள சேப்பாக்கம், நல்லூா், கண்டப்பங்குறிச்சி, அரியநாச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டன. இங்கு வெள்ளிக்கிழமை சுமாா் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com