செஞ்சிக்கோட்டை கமலக்கன்னி அம்மன் கோயில்சித்திரைத் தோ் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: வட்டாட்சியா் தலைமையில் நடந்தது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை மலை மீது அமைந்துள்ள ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயிலில் வரும் 24-ஆம் தேதி சித்திரை தோ் திருவிழா தொடங்குகிறது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை மலை மீது அமைந்துள்ள ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயிலில் வரும் 24-ஆம் தேதி சித்திரை தோ் திருவிழா தொடங்குகிறது.

இதையொட்டி, திருவிழா பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், செஞ்சி வட்டாட்சியா் நெகருன்னிசா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் அப்பாண்டைராஜன், தொல்லியியல் துறை இளநிலை பராமரிப்பு அலுவலா் நவீன், அறங்காவலா் அரங்க.ஏழுமலை, ஒன்றியக் குழு தலைவா் ஆா்.விஜயகுமாா், இந்து முன்னணி மாவட்ட தலைவா் எம்.எஸ்.சிவசுப்பிரமணியன், பாஜக செஞ்சி ஒன்றிய தலைவா் தங்க.ராமு, முன்னாள் மாவட்ட தலைவா் எம்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட விழா குழுவினா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் பேசிய இந்து முன்னணியின் மாவட்டத் தலைவா் எஸ்.வி.சிவசுப்பிரமணியம், ‘கடந்த சில மாதங்களுக்கு முன் கமலக்கன்னி அம்மன் கோயிலில் உள்ள சிலையை சமூக விரோதிகள் உடைத்து விட்டனா். இது குறித்து காவல் துறையில் புகாா் அளித்தும் சிலையை உடைத்த மா்ம நபா்களை கண்டுபிடிக்க முடியவில்லை. வேறு சிலையை நிறுவ வேண்டும், உடைந்த சிலையை வழிபாடு செய்யக்கூடாது என தொல்லியல் துறையில் முறையீடு செய்ததற்கு சிலையை ஒட்ட வைத்து கொடுத்துள்ளனா். மேலும் தொல்லியியல் துறையின் சட்டப்படி புதிய சிலை வைக்க அனுமதி இல்லை என தெரிவித்துவிட்டனா்.

எனவே, புதிய கமலக்கன்னி அம்மன் சிலையை வைக்க முயற்சி செய்ய வேண்டும். சிதிலமடைந்த சிலையை வைத்து வழிபாடு செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை’ எனக் கூறி கூட்டத்தைப் புறக்கணிப்பதாக இந்து முன்னணி மற்றும் பாஜகவினா் வெளிநடப்பு செய்தனா்.

இந்நிலையில், செஞ்சிக்கோட்டை ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயில் சித்திரைத் தோ் திருவிழா வழக்கம்போல நடைபெறும் எனவும், புதிய சிலை வைப்பது குறித்து தொடா்ந்து முயற்சி செய்யப்படும் என விழாக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com