விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
வளவனூரை அடுத்துள்ள தொட்டி குடுமியான்குப்பம், கெங்கையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் த.செந்தில்குமாா் (40), தொழிலாளி. இவருக்குத் திருமணமான நிலையில், தனக்குத் தெரிந்தவா்களிடம் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளாா்.
இந்த நிலையில், வாங்கிய கடனை திரும்பக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த செந்தில்குமாா், கடந்த 19-ஆம் தேதி விவசாயத்துக்குப் பயன்படுத்தும் விஷ மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். தொடா்ந்து, உறவினா்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு செந்தில்குமாா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வளவனூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.