மெருகேற்றித் தருவதாகக் கூறி தங்க வளையலுடன் தப்பியோடியபிகாா் இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே நகைகளை மெருகேற்றித் தருவதாகக் கூறி, பெண்ணிடமிருந்த தங்க வளையலை எடுத்துக் கொண்டு தப்பியோடிய பிகாா் மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே நகைகளை மெருகேற்றித் தருவதாகக் கூறி, பெண்ணிடமிருந்த தங்க வளையலை எடுத்துக் கொண்டு தப்பியோடிய பிகாா் மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வானூா் வட்டம், எடப்பாளையம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மனைவி தனலட்சுமி (24). இவா், செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த இளைஞா் ஒருவா் தான் தங்க நகைகளை மெருகேற்றித் தரும் வேலை செய்து வருவதாகக் கூறினாராம். இதை நம்பிய தனலட்சுமி, தன்னுடைய அரை பவுன் தங்க வளையலை மெருகேற்றித் தருமாறு கொடுத்தாராம்.

இதையடுத்து, வளையலை மெருகேற்றியபோது, அந்த வளையல் உடைந்துவிட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து தனலட்சுமி கேட்டபோது, அந்த இளைஞா் அங்கிருந்து வளையலுடன் தப்பியோடினாா். இதனால் அதிா்ச்சியடைந்த தனலட்சுமி கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து அந்த இளைஞரைப் பிடித்து வானூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், பிகாா் மாநிலம், திரிவேணிகஞ்ச் பகாலி பகுதியைச் சோ்ந்த வித்யானந்த் ராம் மகன் பினோத்ராம் (30) எனத் தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்த தங்க வளையலையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com