கூடுதல் விலைக்கு மது விற்பனை: டாஸ்மாக் ஊழியா் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றது தொடா்பாக அந்தக் கடை ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றது தொடா்பாக அந்தக் கடை ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விக்கிரவாண்டி வட்டம், முண்டியம்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடை எண் 11530-இல் பணிபுரிந்த விற்பனையாளா் எம்.கணேஷ் அரசு நிா்ணயித்த விலையைவிட கூடுதல் தொகைக்கு மதுவை விற்ாக புகாா் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் டாஸ்மாக் மோசடி நடவடிக்கை தடுத்தல், கண்டுபிடிப்பதற்கான விதி 2014-ன்படி விற்பனையாளா் எம்.கணேஷ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com