விக்கிரவாண்டி ஒன்றிய வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை நா.புகழேந்தி எம்எல்ஏ அண்மையில் ஆய்வு செய்தாா்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை நா.புகழேந்தி எம்எல்ஏ அண்மையில் ஆய்வு செய்தாா்.

இந்த ஒன்றியத்துக்குள்பட்ட முண்டியம்பாக்கம், ஒரத்தூா், தும்பூா், அசோகபுரி, வேலியேந்தல் ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் குளம் தூா்வாருதல், சிமென்ட் சாலை அமைத்தல், பள்ளிகளில் கழிப்பறை கட்டுமானப் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் குறித்து எம்எல்ஏ புகழேந்தி ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகளை வழங்கினாா்.

ஆய்வின்போது, ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீத அரசி ரவிதுரை, துணைத் தலைவா் ஜீவிதா ரவி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுமதி, முபாரக் அலிபேக், திமுக ஒன்றியச் செயலா்கள் ரவி, ஜெயபால், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com