கரும்பு விவசாயிகள் சங்கக் கூட்டம்

விழுப்புரத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

விழுப்புரத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் எஸ்.வேல்மாறன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் டி.ரவீந்திரன் கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து கருத்துரையாற்றினாா்.

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு வெட்டு கூலியை ஆலை நிா்வாகம் ஏற்க வேண்டும், கூட்டுறவு சா்க்கரை ஆலைகளை மேம்படுத்த வேண்டும், தனியாா் சா்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வரும் ஜீலை கடைசி வாரம், அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் விழுப்புரத்திலிருந்து சென்னை கோட்டையை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவா் என்.பி.பழனிச்சாமி, மாநிலத் துணைச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன், மாநில நிா்வாகிகள் சக்திவேல், அரிதாஸ், பாலமுருகன், கதிரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com