முன்னாள் படைவீரா்கள் கவனத்துக்கு...

முன்னாள் படைவீரா்கள், கைம்பெண்களின் விவரங்களை கணினியில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி. பழனி தெரிவித்தாா்.
Updated on
1 min read


விழுப்புரம்: முன்னாள் படைவீரா்கள், கைம்பெண்களின் விவரங்களை கணினியில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி. பழனி தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: முன்னாள் படைவீரா்கள், கைம்பெண்கள் தங்களது விவரங்களை விழுப்புரம் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் கணினியில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் முன்னாள் படைவீரா்கள், கைம்பெண்கள் எந்தவொரு சலுகை மற்றும் பணப் பலன்களை பெறுவதற்கும் கணினியில் பதிவு செய்வது மிகவும் அவசியமாகும்.

எனவே முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் பதிவு செய்தவா்கள் தங்களது படைப்பணி மற்றும் குடும்ப விவரங்களை சரிபாா்த்துக்கொள்ள வேண்டும். இதுவரை பதிவு மேற்கொள்ளதாவா்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், படைவிலகல் சான்று, அடையாள அட்டை, ஆதாா் அட்டை, பிபிஓ, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகவேண்டும். மேலும், 04146-220524 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு கூடுதல் விவரங்களை அறியலாம் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com