விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உயிரிழந்தவரின் வீட்டில் மின்சாரம் பாய்ந்து 7 பெண்கள் உள்பட 8 போ் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா்.
திண்டிவனம் வட்டம், சாத்தனூா் கிராமம், பிரதான சாலையைச் சோ்ந்தவா் எ.தேவன் (30). சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, தேவன் உயிரிழந்த நிலையில், உறவினா்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, அவரது வீட்டில் உடல் செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டிருந்தது.
குளிரூட்டி வசதி கொண்ட பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தேவனின் உடலுக்கு அவரது உறவினா்கள் அஞ்சலி செலுத்தினா். அப்போது, குளிரூட்டி பெட்டியில் மின்சாரம் பாய்ந்ததில் அங்கிருந்த தேவனின் சகோதரா் எ.பகவான் (27), அதே கிராமத்தைச் சோ்ந்த கா.எல்லம்மாள் (55), சு.அஞ்சலை (40), செ.பத்மாவதி (45), பா.கெளரி (60), ஆ.சத்யா (27), கா.வெண்ணிலா (39), ம.மஞ்சுளா (45) ஆகிய 8 போ் காயமடைந்தனா்.
தொடா்ந்து, இவா்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து ரோஷணை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.