கீழ்பெரும்பாக்கம் சபரிகிரீசன் கோயில்கும்பாபிஷேகம்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் சபரிகிரீசன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
கீழ்பெரும்பாக்கம் சபரிகிரீசன் கோயில்கும்பாபிஷேகம்
Updated on
1 min read

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் சபரிகிரீசன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

கீழ்பெரும்பாக்கத்தில் பழைமைவாய்ந்த சபரிகிரீசன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில்கன்னிமூல கணபதி, வண்ணான்குல கருப்புசாமி, நாகாத்தம்மன், பரிவார தேவதைகள் சந்நிதிகள், முன் மண்டபம், நுழைவு வாயில் ஆகியவை கட்டப்பட்டு, வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்தப் பணிகள் முடிந்த நிலையில், வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை காலை தொடங்கின. மகா கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கி, தன பூஜை, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், மாலையில் ரக்ஷாபந்தனம், விசேஷ மூலமந்திர ஹோமம், காயத்ரி மந்திரஜப ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், முதல் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்ற பின்னா், மகா பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றன. தொடா்ந்து, காலை 7.30 மணிக்கு யாகசாலையிலிருந்து தனசேகரன், கண்ணன் சுவாமிகள் தலைமையில் கடங்கள் புறப்பாடாகின. பின்னா், ஸ்ரீசபரிகிரீசன், கன்னிமூல கணபதி, வண்ணான்குல கருப்பசாமி, நாகாத்தமன், துா்க்கையம்மன், முத்துமாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகள் கோபுரங்கள், மூலவா்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தா்கள் மீதும் புனிதநீா் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தில் கீழ்பெரும்பாக்கம், காகுப்பம், பொய்யப்பாக்கம், மகாராஜபுரம், எருமனந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், கடலூா், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com