விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. ரயில் மறியல்: 100 பேர் கைது

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. ரயில் மறியல்
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. ரயில் மறியல்

விழுப்புரம்: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் வியாழக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், விவசாய விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும், நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மூர்த்தி, ஏ.சங்கரன், எஸ்.கீதா, ஆர்.டி.முருகன், விழுப்புரம் வட்டச் செயலர் ஆர்.கண்ணப்பன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தொடர்ந்து திருப்பதியிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற ரயிலை விழுப்புரம் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் விக்கிரவாண்டி வட்டக்குழு உறுப்பினர் தீ. அஞ்சா புலி தண்டவாளத்தில் விழுந்து மயக்கமடைந்தார்.

அவரை கட்சியினர் தூக்கிச் சென்று, ரயில் நிலையப் பகுதியில் நின்ற 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதாக 20 பெண்கள் உள்பட 100 பேரை போலீஸார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com