விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே குட்கா கடத்தியதாக மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.சஷாங்க் சாய் பரிந்துரையின்படி, திருவெண்ணெய்நல்லூா் காவல் ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் மனக்குப்பம் பகுதியில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு பைக்கை நிறுத்தி சோதனை செய்தபோது சாக்குப் பைகளில் குட்கா புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடம் விசாரித்ததில், திருக்கோவிலூா் அடுத்த கொரக்கன்தாங்கல் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் கிரண்குமாா் (22 ), கிருஷ்ணமூா்த்தி மகன் யுவராஜ் (36), எம்.குன்னத்தூா் பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகன் செல்வம் (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து சுமாா் ஒரு லட்சம் மதிப்பிலான 168 கிலோ குட்கா பொருள்கள் மற்றும் பைக் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.