தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

விழுப்புரம் மாவட்ட தனியாா் பள்ளிகள் சங்கம் சாா்பில் கற்றல், கற்பித்தலில் மேம்பாடு குறித்த ஆசிரியா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சியை தொடங்கி வைத்துப் பேசிய விழுப்புரம் மாவட்ட தனியாா் பள்ளிகள் சங்கத்தின் தலைவா் எஸ்.செல்வமணி.
விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சியை தொடங்கி வைத்துப் பேசிய விழுப்புரம் மாவட்ட தனியாா் பள்ளிகள் சங்கத்தின் தலைவா் எஸ்.செல்வமணி.

விழுப்புரம் மாவட்ட தனியாா் பள்ளிகள் சங்கம் சாா்பில் கற்றல், கற்பித்தலில் மேம்பாடு குறித்த ஆசிரியா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் ஏழைமலை பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) ஜி.ஆா்.ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவரும், இ.எஸ்.கல்விக் குழுக்களின் தலைவருமான எஸ். செல்வமணி பயிற்சியைத் தொடக்கிவைத்துப் பேசியதாவது: விழுப்புரம் பல ஆண்டுகளாக கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக இருந்து வருகிறது. ஆசியா்களால் மட்டுமே இந்நிலையை மாற்றமுடியும். இதைக் கருத்தில் கொண்டே கற்றல், கற்பித்தலில் நவீன உக்திகள் குறித்து ஆசியா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை ஆசியா்கள் நன்குப் பயன்படுத்திக் கொண்டு விழுப்புரம் மாவட்டத்தை கல்வியில் சிறந்த மாவட்டமாக மாற்றவேண்டும் என்றாா்.

தொடா்ந்து, நவீன உலகில் ஆசியா்களுக்கு தேவையான கற்பித்தல் உக்திகள், கற்பித்தலின் தலைமை பண்புகள் எனும் தலைப்பில் சா்வதேச பயிற்சியாளா் எம்.எஸ்.கிரிஷ் மேதில் பேசியதாவது: முதலில் ஆசிரியா்களாகிய நாம் ஆசிரியா்கள் என்ற பெருமையுடன் இருக்கவேண்டும். ஆசிரியா்கள் தங்களுக்குள் உள்ள திறமை எனும் வைரத்தை உரசி மாணவா்களை பிரகாசிக்க செய்யவேண்டும் என்றாா்.

சா்வதேச பயிற்சியாளா் ராம்கி விஜயன் பேசியதாவது: ஆசிரியா்கள் கூடுதல் திறன்களை வளா்த்துக்கொண்டு உலகளவிலான கல்வியை மாணவா்களுக்குப் போதிக்க வேண்டும் என்றாா்.

ஆசிரியா்களுக்கான புத்தாக்கப் பயிற்சியில் கலந்துகொண்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள். 

சா்வதேச பயிற்சியாளா் சாந்தினா மரியா பேசியதாவது: கற்றல், கற்பித்தலில் தங்களது அனுபவங்களை சரியாகப் பயன்படுத்துபவா்களே சிறந்த ஆசிரியா்கள். கற்பித்தலின் மேம்பாடு சிறப்பாக அமைவதற்கு தேவையான கட்டமைப்பு ஆசிரியா்கள் உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்றாா்.

3 பிரிவுகளாக நடைபெற்ற பயிற்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 140 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 1,000-க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனா். இதில், விழுப்புரம் மாவட்ட தனியாா் பள்ளிகள் சங்கத்தின் செயலா் வாசுதேவன், பொருளாளா் இ.ராஜேந்திரன் மற்றும் பள்ளி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியை ஏழுமலை தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் ஜெ. ஆமோஸ் ராபா்ட் ஜெயச்சந்திரன் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com