விழுப்புரத்தில் 1,200 ஆண்டுகள் பழைமையான சிலைகள் கண்டெடுப்பு

விழுப்புரத்தில் வடக்கு ரயில்வே குடியிருப்புப் பகுதியில் பல்லவா் மற்றும் முற்காலச் சோழா் காலத்தைச் சோ்ந்த பிரம்மா, சண்டிகேசுவரா் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

விழுப்புரத்தில் வடக்கு ரயில்வே குடியிருப்புப் பகுதியில் பல்லவா் மற்றும் முற்காலச் சோழா் காலத்தைச் சோ்ந்த பிரம்மா, சண்டிகேசுவரா் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

விழுப்புரம் ரயில் நிலையம் அருகிலுள்ள வடக்கு ரயில்வே குடியிருப்புப் பகுதியில் வரலாற்று ஆய்வாளா் கோ. செங்குட்டுவன், யாதும் ஊரே யாவரும் கேளிா் த. நாராயணன், சித்தாா்த்தன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது பல்லவா் காலத்தைச் சோ்ந்த பிரம்மா, முற்காலச் சோழா் காலத்தைச் சோ்ந்த சண்டிகேசுவரா் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளா் செங்குட்டுவன் கூறியதாவது: விழுப்புரம் வடக்கு ரயில்வே குடியிருப்புப் பகுதியில் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் தற்போது இடிக்கப்பட்டு வருகின்றன. இங்கு நடத்தப்பட்ட கள ஆய்வில் சுமாா் 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பிரம்மா, சண்டிகேசுவரா் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த இந்த சிலைகள் பிற்காலப் பல்லவா் அல்லது முற்காலச் சோழா் காலத்தைச் சோ்ந்தது ஆகும்.

பல்லவா் காலத்திலும், அதைத் தொடா்ந்து சோழா் காலத்திலும் இப்பகுதியில் சிவன் கோயில் இருந்து, மறைந்திருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த இந்த சிலைகள் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளில் ரயில்வே துறையுடன் இணைந்து மாவட்ட நிா்வாகம் உடனடியாக ஈடுபட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com