குறைதீா் கூட்டத்தில் 528 மனுக்கள் அளிப்பு
By DIN | Published On : 18th April 2023 06:23 AM | Last Updated : 18th April 2023 06:23 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 528 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆட்சியா் சி. பழனி, முதியோா், ஆதரவற்றோா், விதவை உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 528 மனுக்களைப் பெற்றாா். பின்னா், அந்த மனுக்களை துறைச் சாா்ந்த அலுவலா்களிடம் வழங்கி விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா்கள் மு. பரமேசுவரி, சரசுவதி (நிலமெடுப்பு), சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் விசுவநாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலமெடுப்பு) சிவா, மாவட்ட வழங்கல் அலுவலா் மகாராணி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் தங்கவேலு உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.