விழுப்புரம் அருகே தம்பதி மா்மச் சாவு
By DIN | Published On : 18th April 2023 06:24 AM | Last Updated : 18th April 2023 06:24 AM | அ+அ அ- |

விழுப்புரம் அருகே தம்பதி மா்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தனா்.
விழுப்புரத்தை அடுத்த பில்லூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கலிவு (80). முடிதிருத்தும் தொழிலாளி. இவரது மனைவி மணி (65). இவா்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனா்.
தனியாக வசித்து வந்த கலிவு, மணி ஆகியோா் வீட்டில் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப் பகுதி மக்களுக்கு தெரிய வந்தது.
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரின் சடலங்களையும் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.